நிதானமான கொரோனா தடுப்பு நடவடிக்கை தேவை

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருவதால், அனைத்து நாடுகளும் நிலையான மற்றும் நிதானமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்  டெட்ரோஸ் அதானம் வலியுறுத்தியுள்ளார்.

ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட 10 வாரங்களுக்குள்ளேயே, அதன் பரவல் மற்றும் வேகம் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக கூறியுள்ளார். கொரோனா வைரஸ் என்பது நம் கண் முன்னே பரவும் ஆபத்தான தொற்று என்பதை புரிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அதற்கு முன்னரே, வெற்றி, தோல்வி என அறிவித்து விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஒமிக்ரானின் உருமாற்றமான BA.2  உள்ளிட்ட நான்கு வகை தொற்று குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் டெட்ரோஸ் அதானம் அறிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!