ஒசூர் அருகேயுள்ள மரக்கட்டா வனப்பகுதியில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இந்த குரங்குகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையோரத்தில் கொட்டப்படும் உணவுகளை சாப்பிட்டு செல்லும், அந்த வகையில் சாலையோரத்தில் கொட்டி கிடந்த உணவுகளைதின்ற குரங்கு ஒன்று அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்றில் சிக்கி அடிபட்டுள்ளது. பலத்த காயத்துடன் இருந்த அந்த குரங்கைமீட்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதனை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அந்த குரங்கு சிறிது நேரத்திலே பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்துகுரங்கின் உடலை அதே இடத்தில்சம்பிரதாயமுறைப்படி பொதுமக்கள் நல்லடக்கம் செய்தனர். தொடர்ந்து குரங்கின்சமாதிக்குமாலையும்அணிவித்து வணங்கி சென்றனர்.