இறைச்சி வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

 

ஹலால் இறைச்சி சர்ச்சைக்கு இடையே, பெங்களூரு கடைகளில் இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் விற்பனை களைக்கட்டியது.

கர்நாடகாவில், கனட வருடப்பிறப்பான உகாதி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மறுநாள் அசைவ உணவுகளை சாப்பிடுவது வழக்கம் என்பதால், இன்று பெங்களூருவில் கடைகள் முன் மக்கள் இறைச்சிகளை வாங்க வரிசை கட்டி நின்றனர்.

மேலும் ஏற்கனவே ஹலால் செய்யப்பட்ட இறைச்சிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி இந்து அமைப்பினர் பேரணி நடத்திய நிலையில், அதனை கண்டுகொள்ளாது மக்கள் வழக்கம் போல் இறைச்சிகளை வாங்கிச்சென்றனர்.

 

Translate »
error: Content is protected !!