தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

 

 

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரமாக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் பரவலுக்கு பின் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15 ஆயிரத்து 102 பேருக்கு கொரோனா பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று அதிகம் என்றாலும்,  தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 522 ஆக குறைந்திருப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. நேற்று மட்டும் தீவிர தொற்றிலிருந்து 31 ஆயிரத்து 377 மீண்டுள்ளனர்.

இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 புள்ளி 21 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது வரை 176 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 20 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!