கேரளாவில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு..!

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு நோய் பரவுவதைத் தடுக்க பல்வேறு தளர்வுகளுடன் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை விதித்தது. அதன்பிறகு ஒரு மாதத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும், அத்தியாவசிய கடைகள் திறக்க மற்றும் வாகனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டன.

இந்த நிலையில், சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கொரோனா தொற்று பரவ வழிவகுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாளை (29) முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

Translate »
error: Content is protected !!