பக்தர்கள் வர தடை விதிக்க முடியாது

 

மகர சங்கராந்தியை முன்னிட்டு, கங்காசாகருக்கு பக்தர்கள் வர தடை விதிக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை போன்று வட மாநிலங்களில் மகர சங்கராந்தி விழா பிரபலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் இந்த விழாவையொட்டி, கங்கா சாகர் தீவுக்கு ஏராளமான பகதர்கள் வருகை தந்து புனித நீராடுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. ஆனால் மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்கா சாகர் மேளாவுக்கு தடை விதிக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். அதேநேரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு சுயகட்டுப்பாட்டுடனும் முன்னெச்சரிக்கையுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!