விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் இணைத்து நடிக்கும் முதல் படம் “மகான்”. சீயான் 60 என்று அழைக்கப்பட்டு வந்த படத்திற்கு “மகான்” என்று தலைப்பு வாய்ப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.
இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த விடியோவை படக்குழு வெளிட்டுள்ளது. அதில் துருவ் விக்ரம் தாதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் அதற்கான போஸ்டர் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டர் மற்றும் வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.