முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை, வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.
அவற்றை ரத்து செய்யக் கோரிய ஜெகத்ரட்சகன் மனுவை ஏற்று நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்தார்