100 கோடி வசூல் அடித்து ‘டாக்டர்’ படம் சாதனை

தமிழ் முன்னனி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் வெளியான படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஹீரோயினாக பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் வெளியான இப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், திரையரங்குகளில் படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!