மாத்தி பேசும் திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கூட்டுறவு வங்கியில் விவசாய கடன், நகை கடன்  தள்ளுபடி என கூறி விட்டு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை  கூறுவது மக்களிடையே அதிருபதியை ஏற்படுத்தியிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூரில்  அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ஸ்டாலின் முதல்வரானால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என  கூறியதாக  தெரிவித்தார். ஆனால் 535 வாக்குறுதி வாக்குறுதி அளித்தும், அதிமுக அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டத்திற்கு மட்டுமே  திமுக அரசு அடிக்கல் நாட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தான் ஆட்சியில் இருந்தபோது, திமுக மீது பல வழக்குகள் போட்டு இருக்க முடியும் என்றும், மக்கள் நலன் கருதி பணியில் மட்டும் கவனம் செலுத்தியதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கூட்டுறவு வங்கியில் விவசாய கடன், நகை கடன்  தள்ளுபடி என கூறி விட்டு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை  கூறுவது மக்களிடையே அதிருபதியை ஏற்படுத்தியிருப்பதாக குற்றம்சாட்டினார்.

 

Translate »
error: Content is protected !!