5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை  காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

 

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 24 மில்லிமீட்டர் மழை பொழிந்தது. இந்த கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கேஆர்பி அணை, பாரூர் அணை மற்றும் பாம்பாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. மேலும் அணைகளுக்கு அதிக அளவில் நீர்வரத்து உள்ள காரணத்தால் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!