“அண்ணாத்த” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “அண்ணாத்த”. இப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.மேலும் இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

“அண்ணாத்த” படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என படக்குழு அதிகார பூர்வமாக நேற்று அறிவித்தது .

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழு வெளிட்டுள்ளது. வெளியிட்ட 10 நிமிடங்களில் அதிக லைக்குகளை பெற்று வருகிறது. அதே போல், மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!