காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக 37 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காஷ்மீரில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனிடையே, புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்றுள்ளதால், விமான நிலையங்கள் பரபரப்பாக காணப்படுகின்றன. இந்நிலையில், காஷ்மீரில் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக 37 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 5 விமானங்கள் மட்டுமே திட்டமிட்டபடி இயக்கப்பட்டதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்தே காஷ்மீரில் விமான சேவை பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விமானம் ரத்து செய்யப்பட்டதால், நூற்றுக்கணக்கான பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். இதனால், விமான நிலையங்களில் குழப்பமான சூழல் காணப்பட்டது.