நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு,
“உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.