சேலத்தில் கடந்த 23ம் தேதி கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து இடிபாடுகளில் சிக்கி ஏற்கனவே 6 பேர் உயிரிழந்துள நிலையில், தற்போது இடிபாடுகளுக்குள் சிக்கிய மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மொத்த பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கருங்கல்பட்டி பகுதி பாண்டுரங்கநாதசாமி தெருவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் 4 வீடுகள் கொண்ட முதல் தளத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் ஏற்கனவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் தற்போது முருகன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.