வரும் அக்டோபர் 2 ஆம் தேதி, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காந்தி ஜெயந்தி அன்று கிராம நிர்வாக அலுவலர் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களில் அனைவரும் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.