ஹைதியில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து, பலர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,248 ஆக உயர்ந்துள்ளதாக ஹைதி அரசு தெரிவித்துள்ளது.