நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ள பேருக்கு ஏற்பட்டதுடன், திருக்குறுங்குடி நம்பி கோவிலில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. கோவிலுக்கு சென்று திரும்பும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து மீட்புக்குழுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கயிற்றை கட்டி மக்களை மீட்டனர்.தங்களை பத்திரமாக மீட்ட தீயணைப்பு படை மற்றும் போலீசாருக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.