கேரளாவில் கனமழை… 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

கேரளாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பெய்து வரும் கனமழையால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், பாலக்காடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு பச்சை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கரையைக் கடந்த குலாப் புயல், வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!