இந்தியா உட்பட 8 நாடுகளின் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.
வைரஸ் பரவுவதை தடுக்க ஹாங்காங் அரசு இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவு வரும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து 2 வாரங்களுக்கு அமலில் இருக்கும்.