திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் டிக்கெட் நாளை மறுநாளும், மே மாத தரிசனத்துக்கு 22ஆம் தேதியும், ஜூன் மாத தரிசனத்துக்கு 23ஆம் தேதியும் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
மேற்கண்ட நாட்களில் காலை 9 மணி முதல் தரிசன நாளை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளலாம். திங்கள் முதல் புதன் கிழமை வரை ஒரு நாளைக்கு 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், வியாழன் முதல் ஞாயிறு வரை ஒரு நாளைக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.