இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2வது இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு வரும் 21ஆம் தேதி நடைபெறுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வரும் 21-ம் தேதி நடைப்பெற உள்ள இந்தியா ஆஸ்திரேலிய இடையேயான இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிகளை வகுக்க பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.