கால்பந்து போட்டிக்காக வெளிநாடு சென்றார் இன்பநிதி: வழியனுப்பி வைத்தார் முதல்வர்

மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட சட்டன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய மகன் இன்பநிதி போட்டிக்காக வெளிநாடு செல்கிறார்.

உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட நெரோகா கால்பந்து அணியின் ட்விட்டர் பதிவில், ‘சென்னை ட்ரையல்ஸ் கால்பந்து அணியில் இருந்து இளம் ஃடிபெண்டர், இன்பன் உதயநிதியை தேர்வு செய்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இன்பநிதி நடக்கவிருக்கும் இந்தியன் ஐ-லீக் கால்பந்து போட்டியில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நெரோகா கால்பந்து அணியில் சிறப்பாக  விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்வதற்காக இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தார் . அவரை வழி அனுப்புவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வருகை தந்தனர். முன்னதாக முதல்வர் வருகையொட்டி சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Translate »
error: Content is protected !!