பிக்பாஸ் 5 வீட்டிற்கு செல்லப்போகிறாரா ஜி.பி.முத்து…! வைரலாகும் புகைப்படும்

தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை வந்த 4 சீசனும் மக்களிடையே பெரும் அளவில் ரீச் ஆனது. விரைவில் பிக் பாஸ் சீசன் 5 தொடங்க உள்ளது. அதற்கான ப்ரொமோ வெளியிடப்பட்டு பெரும் அளவில் அனைவரையும் ஈர்த்தது.

மேலும் சீசன் 5யில் கலந்துகொள்ள போகும் நபர்கள் குறித்த ஆர்வம் அனைவர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கலந்து கொள்ள போகும் நபர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் ஒரு பட்டியல் உலாவி கொண்டுவருகிறது.

அதில், குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், டிக்டாக் ஜி.பி.முத்து பிக் பாஸ் செட்டிற்கு முன்பு எடுத்த புகைப்படுத்த சமூக வலைதளபாகத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பிரபலங்களும் லைக் செய்து ஜி.பி.முத்து பிக் பாஸ் வீற்றிக்குள் இணையப்போகிறாரா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Translate »
error: Content is protected !!