தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், கடந்த 2ம் தேதி இந்தியாவில் கண்டறியப்பட்டது. டெல்டாவை விட ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால், ஒமைக்ரான் நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது இந்தியாவில் 1,270 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில் மட்டும் 450 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.