மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் முக. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். 2.23 ஏக்கரில் 39 கோடி செலவில் அமைக்கப்படும் என அறிவித்தார். கருணாநிதியின் வாழ்க்கை மற்றும் சிந்தனை பற்றிய நவீன ஒளி படங்களுடன் இந்த நினைவிடம் கட்டப்படவுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.