2012 ல், சென்னையில் 60 கி.மீ. தொலைவில் வெளிப்புற வளைய சாலை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வரை 29 கி.மீ. தொலைவில் சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர்.
அவர்களின் மனுவில், நெடுஞ்சாலை சட்டத்தை பின்பற்றாமல் நிலம் கையகப்படுத்தப்படுவதாக கூறப்பட்டது. இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி பின்பற்றப்பட்டதாக அரசு தரப்பு விளக்கத்தில் கூறப்பட்டது. இதை ஏற்று, நிலம் கையகப்படுத்தும் உத்தரவு செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.