மாநாடு ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு – அதிர்ச்சி!

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் இயக்கப்பட்டு வரும் மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. சில ஆண்டுகளாக தொடர்ந்து திரைப்படம் எதுவும் வெளியாகாத நிலையிலும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது பெரும் வியப்பளித்தது. இந்நிலையில் தீபாவளி அன்று வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் வெளியாகும் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது படத்தை நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சில காரணங்களுக்காக வெற்றி பெற வேண்டிய படம் ஏன் பலியாக வேண்டும் என்று கூறிய அவர் படம் நவம்பர் 25ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!