சமீபத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 68 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கிருமிநாசினி அளிக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த மதுரை உயர்நீதிமன்றம், தமிழக மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும், மீனவர்களை தனிமைப்படுத்தி பின்னர் கொரோனா பரிசோதனை செய்து இருக்கலாம் என்றும் கைது செய்த மீனவர்களை கண்ணியத்துடனும் மனிதாபிமானத்துடனும் நடத்துவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியது. சோதனை.
மேலும் பொங்கலுக்கு முன் தமிழக மீனவர்களை மத்திய அரசு அழைத்து வரும் என்றும் இந்த கோர்ட்டு நம்புகிறது என்றும் தெரிவித்துள்ளது.