வடபழனி முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

வடபழநி ஆண்டவர் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் பிரமாண்ட திருப்பணிகள் முடிந்த நிலையில், அனைத்து ராஜகோபுர விமானங்களுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது.

சென்னையில் வடபழநி ஷேத்ரத்தில் அமைந்துள்ளது வடபழநி ஆண்டவர் கோவில். இக்கோவிலுக்கு, 2007 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 14 ஆண்டுகள் கழிந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, ஆகம விதிகளின் படி திருப்பணிகள் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து, யாகசாலை பிரவேசம், 19ம் தேதி துவங்கி முதற்கால யாக பூஜை, ஜபம், ஹோமம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை செய்யப்பட்டது.  இந்நிலையில், இன்று காலை 10:30 முதல் 11 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பிஷேக நிகழ்வுகளை தடையின்றி நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!