எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்

 

 

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட யூ-டியூபர் மாரிதாஸ் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மாரிதாஸ் ஆன்சர்ஸ் என்ற பெயரில் யூ-டியூப் சேனல் நடத்தி வரும் மாரிதாஸ் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டும் தனியார் தொலைக்காட்சி ஊழியர்களை பற்றி தரக்குறைவாக பேசியது தொடர்பான வழக்கில் அவரை கைது செய்த போலீசார் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஏற்கனவே கடந்த 9 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக  அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்ததால் அவர் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் குறித்து அவதூறு பேசிய வழக்கில் வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!