தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு

தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமானது முதல் கனமழை பெய்யும். கடலோர மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் வரும் 30ம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் உள்மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசான பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!