வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக பல்வேறு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா, பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.