“ஜெய் சுல்தான்” பாடல் படைத்த புதிய சாதனை

கார்த்தி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு பிறகு வெளியான படம் “சுல்தான்”. இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்தார். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் படமான இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியானது.

தமிழகத்தைப் போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் சுல்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் சுல்தான்’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் பாடல் யூடியூப்பில் 75 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று புதிய சாதனையை எட்டியுள்ளது. இதை கார்த்தி ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கொண்டாடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!