ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி எவ்வித மோசடியும் நடைபெறவில்லை

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி எவ்வித மோசடியும் நடைபெறவில்லை மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக தங்களுடைய கேள்விகளை முன்வைத்து வருகின்றனர் அதன் அடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சுனில் குமார் பின்டு, ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதா? அதற்கு ரயில்வேதுறையின் மூத்த அதிகாரிகளும் உடந்தையாக உள்ளார்கள் என்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா? என்றும் அப்படி என்றால் அதனை விசாரணை செய்ய தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என  எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி எவ்வித மோசடியும் நடைபெறவில்லை என ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ளார். ஆனால், ஜனவரி 26ம் தேதி இதே பீகார் மாநிலத்தில் ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் ரயில் நிலையத்தில் ரயிலுக்கு தீ வைத்தனர். அதன் பின்னர் ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி முழு அடைப்பு போராட்டத்தை மாநிலக் கட்சிகள் நடத்தியது இந்நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!