பாலின பாகுபாடு தொடர்பான புகாரில் விளக்கம் அளிக்க கோரி உயர்கல்வித்துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேராசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்காதது, பாலின பாகுபாடு தொடர்பாக கௌரவ விரிவுரையாளர் சங்கம் கடந்த செப்டம்பர் மாதம் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து அனுப்பிய புகாரின் பேரில் விளக்கம் கேட்டு மாநில உயர்கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது தேசிய மனித உரிமைகள் ஆணையம். ஆனால் உயர்கல்வி துறை சார்பாக எந்த விளக்கமும் அளிக்காத நிலையில் மீண்டும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 30 நாட்களுக்குள் உரிய விளக்கம் தரவும், புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கவும் உயர்கல்வி துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.