ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மராட்டிய மாநில தலைநகர் மும்பையிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாளை புத்தாண்டு நெருங்கும் நிலையில், மும்பை காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; –
பொது இடங்களான கடற்கரைகள், திறந்தவெளிகள், கடல் முகங்கள், பூங்காக்கள் போன்றவற்றுக்கு ஜனவரி 15ஆம் தேதி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.அதேபோல், பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவல் மும்பையில் கொரோனா பாதிப்பை அதிகரிக்க அச்சுறுத்துகிறது. மும்பையில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 3,671 ஆக இருந்தது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 190 ஆக பதிவாகியுள்ளது.