இங்கிலாந்தில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அவர், பல பிராந்தியங்களில் ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவதால், சர்வதேச பயணிகளுடன் தொடர்பில்லாதவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், இங்கிலாந்துக்கு ஓமிக்ரான் பாதிப்பு சமூக பரவலாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை 260க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.