தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.
இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி – 57 பேர், மராட்டியத்தில் 54 பேர், டெல்லியில் 54 பேர், தெலுங்கானாவில் 24 பேர், ராஜஸ்தானில் 18 பேர், கர்நாடகாவில் 19 பேர், குஜராத் 14 பேர், கேரளாவில் 15 பேர், ஜம்மு-காஷ்மீர் – 3 பேர், உத்தரப்பிரதேசம் 2 பேர், ஆந்திரா, தமிழ்நாடு, லடாக், சண்டிகர் மற்றும் மேற்கு வங்காளத்தில் தல ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார். ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 200க்கு மேல் தாண்டிய நிலையில் பண்டிகைகள் வருவதால் இந்த ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.