இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமீகரான்

 

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் முதல்முறையாக இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள சுகாதாரத் துறை இணை செயலாளர் லவா அகர்வால், கர்நாடகா மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த 10 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.  இதையடுத்து அது ஓமிக்ரானா என சோதனை செய்த போது, இருவருக்கும் ஓமிக்ரான் தொற்று தான் பரவியது என்பது உறுதி செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடகாவிற்கு வந்த இருவருக்கு ஒமீகரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் இதன் மூலம் முதல்முறையாக இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!