ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு 45-ஆக உயர்வு

இந்தியாவில் ஒமிக்ரான் கொரோனா வைரசின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளது. 

மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால், ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

இதனிடையே இந்தியாவில் மொத்தம் 41 பேர் ஒமிக்ரான் தொற்று பாதிப்புக்குள்ளான நிலையில், இன்று டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 43ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 20 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 9 பேருக்கும், குஜராத் மற்றும் டெல்ல்லியில் தலா 4 பேருக்கும், கர்நாடகாவில் 3 பேருக்கும், சண்டிகர், ஆந்திரா மற்றும் கேரளாவில் தலா ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!