நெல் கொள்முதலுக்கான ஆன்லைன் முன் பதிவு முறை நடைமுறைக்கு ஒத்து வராத திட்டம் என்று முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காவிரி டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் 1 லட்சம் நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையங்கள் திறக்கபாடாமல் இருப்பதால் தேங்கி இருப்பதாக கூறியுள்ளார். நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் ஈரப்பதத்தின்ம் சதவீதம் கூட தளர்த்தமுடியமல் அரசு இருப்பதாகவும், இணையதளம் மூலம் விவசாயிகள் நெல்லை விற்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். எனவே இந்த திட்டத்தை ரத்து செய்து கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.