திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பக்தர்கள் உற்சாகமாக அண்ணாமலையாரை வழிபட்டனர்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. கொரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக, கடந்த இரு வருடங்களாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது தொற்று பரவல் குறைந்ததையடுத்து கிரிவலத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு படையெடுத்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள், சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிரிவலப் பாதையில் நடந்து சென்று அஷ்டலிங்கங்களை வழிபட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.