எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகளை, பங்குச் சந்தைகளில் விற்க முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னதாக மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். இதனையடுத்து,எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளில் 5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான வரைவு திட்ட அறிக்கையை எல்ஐசி நிறுவனம் செபியிடம் கடந்த மாதம் சமர்பித்திருந்தது. இந்நிலையில், எல்ஐசியின் பொதுப்பங்குகளை வெளியிட பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், எல்ஐசி நிறுவனம் 31 கோடியே,62 லட்சத்து 49 ஆயிரத்து 885 பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.