86 வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

இதையடுத்து 2 மாதத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த 85 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் 101 ரூபாய் 40-காசுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 91 ரூபாய் 43-காசுக்கும் விற்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 86 வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் இன்றும் எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் பெட்ரோல் ஒரு லிட்டர் 101 ரூபாய் 40-காசுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 91 ரூபாய் 43-காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Translate »
error: Content is protected !!