பாரத் பயோடெக்கின் இன்ட்ராநேசல் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் ஆய்வுக்கான மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் பயோடெல் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவுக்கு மேலும் மொறு தடுப்பூசியாக இன்ட்ராநேசல் என்னும் தடுப்பூசியை பாரத் பயோடெக் தயாரித்துள்ளது. இதன் 2 கட்ட ஆய்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் 3 ஆம் கட்ட ஆய்வு மற்றும் பூஸ்டர் டோஸ் ஆய்வுக்கான மூன்றாம் கட்ட ஆய்வையும் தொடங்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனிடையே ஆய்வுக்கு அனுமதி அளிக்கும் வகையில் நெறிமுறை தரவுகளை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.