இந்தியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விசா வழங்க, இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த, அந்நாட்டின் வர்த்தக செயலாளர் ஆனி-மேரி டிரிவெல்யன் இந்த மாதம் டெல்லிக்கு வர உள்ளார். இந்த ஒப்பந்தத்தை வெற்றி பெற வைக்கும் முயற்சியாக, இந்தியர்களின் குடியேற்ற விதிகளை தளர்த்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்திய சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் மற்றும் பணி நிமித்தமாக இங்கிலாந்து செல்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மற்றும் எளிதான முறையில் விசாக்களை வழங்குவதற்கு, இங்கிலாந்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.