உடல் நிலையில் குறைவு காரணமாக புழல் சிறையில் அடைக்கபட்டறிந்த பப்ஜி மதன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யூடியூப் சேனலில் பெண்களைப் பற்றிய ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை வெளியிட்டதாகக் கூறி பப்ஜி மதனை கடந்த ஜூன் 16ஆம் தேதி சேலத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜூலை 6ஆம் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணை பகுதியில் அனுமதிக்கப்பட்ட பாப்ஜி மதன் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக சிறைக்குள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் நேற்று மதனுக்கு வலி அதிகமானதால், மதன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறை வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.