வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
தமிழகத்துக்கு விரைந்த மத்தியக் குழுவினர், இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து, கடந்த 3 நாட்களாக மழை பாதித்த மாவட்டங்களை பார்வையிட்டனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர், இன்று காலை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வு குறித்து மத்தியக் குழுவினர் முதல்வருடன் ஆலோசனை நடத்தினர்.