முழு அடைப்பு குறித்து தீர்மானமா..? விமர்சித்த தேவேந்திர பட்னாவிஸ்

இந்தியா வரலாற்றிலேயே முதல்முறையாக, முழு அடைப்பு போராட்டம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது, மகராஷ்டிராவில் தான் என அம்மாநில எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்துள்ளார்.

லக்கிம்பூர் கேரியில், ஜீப் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் சிவசேனா சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தநிலையில், சிவசேனாவின் இந்த செயலுக்கு எதிர்கட்சி தலைவரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டம், ஒழுங்கினை முறைப்படுத்த வேண்டியவர்களே முழு அடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து அமைச்சரவையில் தீர்மானித்ததாகவும் கூறியுள்ளார். இதற்கு முன் இதுபோன்ற போராட்டங்களை நடத்திய  சிவசேனாவிற்கு உச்சநீதிமன்றம் மற்றும் மும்பை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்ததோடு, தடையும் விதித்ததாக கூறினார். இந்த போராட்டம் குறித்தும் உயர்நீதிமன்றம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 

 

 

Translate »
error: Content is protected !!